அமெரிக்கத் தலைவர் டொனால்ட் டிரம்பை கொலை செய்ய ஈரான் திட்டமிட்டுவதாக பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார் அதிபர் டிரம்ப். துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டின் போது செய்தியாளர்ளை சந்தித்த டிரம்ப், “இத்தனை காலம் தான் அதிர்ஷ்டசாலியாக இருந்து வந்தாலும், அந்த நிலை தொடராமல் போகலாம்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப் "அவர்கள் அமெரிக்கத் தலைவரான என்னை அகற்ற விரும்புகிறார்கள். நான் எல்லாப் பட்டியல்களிலும் இருக்கிறேன்," என்று கூறினார். "இன்று காலை நான் ஒரு விஷயத்தைப் பார்த்தேன், அவர்களுடைய எல்லாப் பட்டியல்களிலும் என் பெயர் இருக்கிறது. இதுவரை, நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் அது ஒருவேளை அதிக காலம் நீடிக்காது," என்றும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். ஈரானுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் "முடிந்துவிட்டது" என்று அறிவித்த டிரம்ப். பின்னர் இந்தக் கருத்துக்களை முன் வைத்துள்ளார். ஈரானின் பேச்சுவார்த்தையாளர்களை "கீழ்த்தரமானவர்கள்" என்று அழைத்ததோடு, அவர்களைத் தனக்குச் சிறிதும் பிடிக்கவில்லை என்றும் கூறினார்.
டிரம்ப் தனது முதல் உரையில், "எனக்கு அவர்களைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. வெளிப்படையாகச் சொல்வதானால், அவர்களுடன் நாம் நிறைய நேரத்தை வீணடித்துவிட்டோம் என்றே நான் கருதுகிறேன். நாம் நமது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்," என்று கூறினார். மேலும் "அவர்கள் கொடூரமான, வன்முறை குணம் கொண்டவர்கள்... என்னைப் பொறுத்தவரை, எல்லாம் முடிந்துவிட்டது," என டிரம்ப் கூறினார். மேலும் "நேற்று இரவு ஈரானை கடுமையாகத் தாக்கினோம். அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். இன்று இரவும் அவர்களை கடுமையாக தாக்கப் போகிறோம்" என்று அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். ஈரான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக ட்ரம்ப் அறிவித்ததால் வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் கமெனியின் இறுதிச் சடங்கில் "டிரம்பைக் கொல்லுங்கள்" என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட அலி கமேனியின் இறுதிச் சடங்கில் கூட, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரைக் கொல்ல வேண்டும் என்ற கோரிக்கைகள், தெஹ்ரானில் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்த கிராண்ட் மொசல்லா தொழுகை வளாகம் முழுவதும் எதிரொலித்தன.
கிராண்ட் மொசல்லாவில் இருந்த சுவரொட்டிகள் மற்றும் சுவரெழுத்துக்கள், டிரம்ப் மற்றும் நெதன்யாகுவைக் கொலை செய்யக் கோரியதோடு, கூட்டத்திலும் இதுபோன்ற முழக்கங்கள் எதிரொலித்தன. "இனிமேல் அந்தப் பிணத்துணியே நமது ஆடை. உங்கள் இரத்தத்தின் மீது ஆணையிடுகிறேன்; டிரம்பின் கொலைக்கு நாமே பொறுப்பு," என்று தொழுகைக்கு முன்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கவிஞர் முகமது ரசூலி, ஒலிபெருக்கிகள் மூலம் கூட்டத்தினரிடம் கூறினார். "உலகிலேயே மிகவும் கேவலமான மனிதன் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறான்? இந்த உலகம் இனி டிரம்புக்கு உகந்த இடமாக இல்லை. நமது தலைவரை கொன்றவனை நாம் ஏன் கொல்லக்கூடாது? நாம் அப்படிச் செய்யாவிட்டால் அது அவமானமாகிவிடும்," என்று அவர் கூற, கூட்டம் மேலும் ஆரவாரம் செய்தது.
"நான் இங்கு கோஷமிடவும் பழிவாங்கவும் வந்தேன்," என்று 29 வயதான குலாம்ரெசா சபூனி கூறினார். "அவர்கள் எங்கள் இமாமைக் கொன்றுவிட்டார்கள். நாம் அவர்களின் தலைவரான டிரம்பைக் கொல்ல வேண்டும்." இன்று முடிவடையவுள்ள அந்த இறுதிச் சடங்கு, பதற்றம் தணிந்த ஒரு காலகட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், துக்கம் அனுசரிப்பவர்கள் டிரம்ப் மற்றும் நெதன்யாகுவைக் கொல்லுமாறு மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதையடுத்து நேற்று இரவு ஈரானின் முக்கிய துறைமுக நகரங்கள் மீது அமெரிக்க ராணுவம் நள்ளிரவில் சரமாரி தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் அபாயம் அதிகரித்துள்ளது. இந்தியா நிதியுதவி செய்துவந்த சாபஹார் துறைமுகப் பகுதிகள், பந்தர் அப்பாஸ், சிரிக் நகரங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி 22 நாட்களே ஆன நிலையில் மீண்டும் போர் பதற்றம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.