ஈரானில் நடைபெற்று வரும் பெரும் போரின் காரணமாக ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும், எண்ணெய் சேகரிப்பு மையமும் தாக்கப்பட்டதை அடுத்து, அவை தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதன் காரணமாக ஹைட்ரோகார்பன் கலந்த நச்சு புகை நகரம் முழுவதும் பரவி வானத்தை மூடியது. இந்த புகையை சுவாசித்த மக்களுக்கு கண் எரிச்சல், தொண்டை வலி, சுவாசக் கோளாறு போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஈரானில் அமில மழையும் பொழிந்துள்ளது. இதில் ஹைட்ரோகார்பன், சல்பர், நைட்ரஜன் ஆக்ஸைடுகள் கலந்த நச்சு மழைத்துளிகள் அப்பகுதிகளில் உள்ள கார்கள், கட்டடங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளன. ஈஈரான் 'ரெட் கிரசென்ட் சொசைட்டி', இந்த மழை மிகவும் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளது. இந்த அமில மழையினால் தோல் எரியும், நுரையீரல் பாதிக்கும் என்று அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், ஏர் கண்டிஷனர்களை இயக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்த அமில மழை பயிர் மற்றும் தாவரங்களையும் சேதப்படுத்தும் என்பதால் இயற்கை உணவுப் பொருட்களின் பயன்பாட்டு நிலை கேள்விக்குறியாகி உள்ளது. ஏனெனில், இது போன்ற அமில மழைகள் மரங்கள், மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை இழக்கச் செய்து காடுகளை அழிக்கிறது; ஏரிகளை அமிலமாக்கி மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிர்களை போன்றவற்றை கொல்கிறது. இதனால் இயற்கை பொருட்களின் பயன்பாடு குறைய வாய்ப்பிருக்கிறது.
மேலும் இந்த கருப்புஅமில மழை உருவாகக் காரணம் என்பது, வானிலை மாற்றம் காரணமாக மழை பெய்யும்போது காற்றில் இருந்த எண்ணெய் மற்றும் புகை துகள்களுடன் கலந்து “கருப்பு அமில மழை” உருவானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் கண்டுபிடிப்பு: 1852இல், ஸ்காட்லாந்து வேதியலாளர் ராபர்ட் ஆங்கஸ் ஸ்மித், இங்கிலாந்தின் மான்செஸ்டரில் தொழில்முறை மாசுபாட்டுடன் அமில மழையை முதன்முதலில் தொடர்புபடுத்தி கண்டுபிடித்தார். மேலும் 20ம் நூற்றாண்டுகளில் 1960கள்-1970களில் ஸ்காண்டிநேவியா, கிழக்கு வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பகுதிகளில் சுல்ஃபர் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு உமிழ்வுகளால் காரணமாக அமில மழை பொழிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும், 1963-1972 ஹபார்ட் புரூக் ஆய்வுகள் அமெரிக்காவின் மழையில் pH அளவு 4.03 வரை இருந்ததை உறுதிப்படுத்தின.
தற்போதைய நிலை: இதிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, வீட்டுக்குள் இருப்பது நல்லது. வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது, தோலை மூடுவது போன்ற முன்னெச்சரிக்கைகளை எடுத்தால் ஆபத்தை குறைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். புதிய தாக்குதல்கள் ஏதும் இல்லாவிட்டால் காலப்போக்கில் காற்றின் தரம் மேம்படும் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் போர் பதட்டம் இன்னும் குறையாத பட்சத்தில், போர் நீடிக்கும் அபாயம் இருப்பதால், நிலைமை மோசமாகலாம் என்று நம்பப்படுகிறது. இதனால் ஈரானுக்கும் பாதிப்பு நீடிக்கும் என்றும் அமிலமழையின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்