நம்ம இந்தியாவில் ரோஜா இதழ்கள், பன்னீர், முல்தானி மெட்டி, வேப்பிலை போன்ற பல பொருட்களை பயன்படுத்து குளியல் சோப்புகள் தயாரிக்கப்பட்டு, அதை மக்கள் பயன்படுத்துவது நமக்கு தெரியும் ஆனால் அமெரிக்காவில் ஒரு பிரபல நடிகை குளித்த தண்ணீரை பயன்படுத்தி சோப்புகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
சிட்னி ஸ்வீனி என்ற நடிகை குளித்த தண்ணீரை பயன்படுத்தி டாக்டர் ஸ்குவாச் என்ற நிறுவனம் முதற்கட்டமாக சுமார் 5000 சோப்புகளை தயாரித்து. இன்று முதல் விற்பனை செய்ய உள்ளது. அதிலும் 100 சோப்புகளை தனது ரசிகர்களுக்கு இலவசமாக தர இருப்பதாக சிட்னி தெரிவித்துள்ளார். இந்த சோப்பிற்கான விலையாக அந்த நிறுவனம் சுமார் 1000 ரூபாயாக (இந்திய மதிப்பின் படி நிர்ணயித்துள்ளது.
யார் இந்த சிட்னி ஸ்வீனி?
அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் 1997 ஆம் ஆண்டில் பிறந்த இவர் சிறுவயதில் கால்பந்து,கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தி வந்துள்ளார். அப்போது எதிர்பார்க்காத விதமாக ஒரு சுயதீன திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் ஸ்வீனிக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
அன்று முதல் திரைப்படங்கள் வெப்சிரிஸ் போன்று பலதரப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த 6 வருடங்களுக்கு முன் ஜூன் 2019 இல், ஸ்வீனி HBO நாடகத் தொடரான யூபோரியாவில், Cassie Howard என்ற கதாபாத்திரத்தில் ஒரு நம்பிக்கையற்ற, ஒரு ஆணின் பார்வைக்கு ஏங்குகிற டீனேஜராக நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம் அவரின் திரைத்துறையில் ஒரு மைல்கல்லாக ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அமைத்திருந்தது.
அதன் பிறகு அவர் நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டு கொண்டாடப்படும் ஒன்றாக மாறி. அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
சோப்பு தயாரித்தலின் பின்னணி
பல ஆண்டுகளாக அமெரிக்காவில் அழகு சாதன பொருட்கள் மற்றும் குளியல் சோப் தயாரிக்கும் நிறுவனத்துடன் இணைந்து விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார் ஸ்வீனி. ரசிகர்கள் அவரை கொண்டாடும் விதத்தை பார்த்த டாக்டர் ஸ்குவாச் தனது நிறுவனத்தின் பெயரை பரப்பவும் அதிக லாபம் ஈட்டும் நோக்கத்திலும் இந்த சோப்புகளை தயாரித்து வருகின்றனர்.
சோப்பு தயாரிப்பு மற்றும் விளம்பரம்
பொதுவாக எந்த விதமான சோப்புகளை தயாரிப்பதாக இருந்தாலும் அதில் ஈரப்பத்திற்காக எண்ணெய்களையும் சிறிதளவு தண்ணீரையும் சேர்ப்பது வழக்கம் அது போல இந்த சோப்பில் தண்ணீர் மற்றும் எண்ணெய்க்கு பதிலாக டாக்டர் ஸ்குவாச் நிறுவனம் ஸ்வீனி குளித்த நீரினை பயன்படுத்துகின்றது.
மேலும் இந்த சோப்பிற்கு "SYDNEY'S BATHWATER BLISS" என்ற பெயர் வைத்து இந்த சோப்பின் விளம்பரம் உண்மையாகவே சோப்பு தயாரித்த போது எடுத்த காட்சிகளை வைத்து வெளியிடப்பட்டு இருக்கிறது.
இன்று இந்த சோப்பு அமெரிக்காவில் சந்தைக்கு வர இருக்கும் நிலையில் இதை வாங்குவதில் சிட்னி ஸ்வீனியின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்