உலகம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திடீர் நீக்கம்.!!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஹமீது ஷின்வாரியை தாலிபான்கள் பதவியிலிருந்து நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஹமீது ஷின்வாரியை தாலிபான்கள் பதவியிலிருந்து நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாலிபானின் புதிய உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானியின் சகோதரர் அனஸ் ஹக்கானி, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ஹமீது ஷின்வாரியை பதவி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கு எந்தவித காரணமும் கூறப்படாத நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நசீப் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சிராஜுதீன் ஹக்கானியின் உறவினர் என்று கூறப்படுகிறது.