உலகம்

புதுச்சேரியில் ஆட்டோ தொழிலாளர்கள் போராட்டம்…காரணம் இது தான்!

Malaimurasu Seithigal TV

புதுச்சேரியில் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் ஆட்டோவிற்கு எரிவாயு நிரப்புவதற்கு  ஏற்பாடு செய்திட வேண்டும், அமைப்பு சாரா சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு தீபாவளி உதவி தொகையை ரூபாய் 5,000 ஆ   க உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

புதுச்சேரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். இதில் ஏஐடியுசியை சேர்ந்த ஆட்டோ ஒட்டும் தொழிலாளர்கள், அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் ஆட்டோவிற்கு எல்.பி.ஜி எரிவாயு நிரப்புவதற்கு  ஏற்பாடு செய்திட வேண்டும், எஃப்.சி புதுப்பித்தல் செய்வதற்கு காலதாமதமானால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 50 அபராதம் விதிப்பதை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும்.

அமைப்பு சாரா சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு தீபாவளி உதவி தொகையை ரூபாய் 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்டோர் மிஷின் வீதியில் இருந்து ஊர்வலமாக வந்து சட்டபேரவை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர், இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தங்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.