உத்தரப்பிரதேச முன்னாள் எம்.பி அதிக் அகமது சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளது.
உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.பி. அதிக் அகமது. பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக போலீசாரால் கைது செய்யப்பட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் அவரது மகன் ஆசாத் அகமது உத்திரப்பிரதேச காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். தனது மகனின் இறுதி சடங்கிற்காக காவல்துறையினரால் அவர் உத்தரபிரதேசம் அழைத்து வரப்பட்டார்.
இறுதி சடங்கு முடிந்து மீண்டும் சிறைக்கு செல்வதற்கு முன்பான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரிடம் பத்திரிகையாளர்கள் அவரது மகன் இறப்பு தொடர்பாக கேள்வி எழுப்பினர். அக்கேள்விகளுக்க பதிலளித்துக் கொண்டிருக்கும் போதே இந்துத்துவ பயங்கர வாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்ற இந்துத்துவ பயங்கர வாதிகள் ஜெய் ஸ்ரீராம் என முழக்கங்களை எழுப்பினர்.
காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த அதிக் அகமது பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கொல்லப்பட்டது. உலகம் முழுக்க மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதிக் அகமது சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக அல்கொய்தா அமைப்பு ரம்ஜான் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அதிக் முகமது மற்றும் அவரது சகோதரர் அர்ஷப் முகமதுவை தியாகிகள் என குறிப்பிட்ட அல்கொய்தா இதற்கு பழி தீர்ப்போம் என மிரட்டல் விடுத்துள்ளது.