உலகம்

மேலும் நீட்டிக்கப்பட்ட ஆங் சாங் சூகியின் சிறைவாசம்!!

Malaimurasu Seithigal TV

ராணுவ ஆட்சியில் உள்ள மியான்மரில் ஜனநாயக ஆட்சிக்கு ஆதரவானதலைவர் ஆங் சான் சூகியின் சிறைத்தண்டனையை மேலும் ஏழு ஆண்டுகள் நீட்டித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஊழல் குற்றச்சாட்டுகளில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது தண்டனை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.  

ஐந்து ஊழல் வழக்குகளில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்து அவருக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தற்போது அளிக்கப்பட்டுள்ள தண்டனையும் சேர்த்து பார்க்கும் போது சூகி அவரது வாழ்நாளில் மொத்தமாக 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

-நப்பசலையார்