உலகம்

ஆளுநர் கைது.... அரசை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டம்....

Malaimurasu Seithigal TV

நாட்டில் உள்ள சாண்டா குரூஸ் மாகாணத்தின் ஆளுநர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தால் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

பொலிவியா நாட்டின் அதிபர் லூயிஸ் அக்ரே தலைமையில் இடது சாரி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசுக்கு எதிராக ஆளுநர் கமாச்சோ தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.  அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் கமாச்சோ மீது பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.  குற்றம் சுமத்தப்பட்ட அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

மக்களுக்காக அரசை எதிர்த்து வந்த கமாச்சோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

-நப்பசலையார்