உலகம்

கப்பல் கவிழ்ந்த விபத்தில் 60 பேர் மாயம்...17 பேர் உயிரிழப்பு...

கடற்கரை அருகே கப்பல் மூழ்கியதில் குறைந்தது 17 உயிரிழந்ததாக கூறப்படுகிறது

Malaimurasu Seithigal TV

மடஸ்காரின் வடகிழக்கு பகுதியில் உள்ள கடற்கரை அருகே 130 பயணிகளோடு கப்பல் சென்று கொண்டிருந்த நிலையில் திடீர் விபத்து நேரிட்டு கடலில் கவிழ்ந்துள்ளது.

கப்பலில் பயணித்த 130 பயணிகளில் இதுவரை 17 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் 60 பேர் மாயமானது குறித்து அவர்களை தேடி வருகின்றனர்.இதில் 45 பயணிகளை மட்டும் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் தன்னார்வளர்களின் உதவியுடன் காணாமல் போனவர்களை தீவிரமாக தேடும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக துறைமுக அதிகாரிகளின் தலைவரான ஜீன் எட்மண்ட் தெரிவித்துள்ளார்.இந்த கப்பல் சரக்குகளை ஏற்றி செல்ல பயன்படுத்தி வருவதாகவும்,அதில் சட்ட விரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்க கூடும் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து மற்றொரு அதிகாரியான அட்ரியன் கூறுகையில் கப்பலில் எதிர்பாரத விதமாக தண்ணீர் புகுந்ததால் கப்பல் நீரில் மூழ்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.