உலகம்

ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு திடீர் உடல்நலக் குறைவு  

மியான்மரில் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.  

Malaimurasu Seithigal TV

மியான்மரில் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

மியான்மரில் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்த ராணுவம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மீது 6 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு, தலைநகர் நேபிடாவில் உள்ள நீதிமன்றத்திற்கு ஆங் சான் சூகி அழைத்து செல்லப்பட்டார்.

நீதிமன்ற அறைக்குள் நுழைந்தபோது மிகவும் சோர்வாக காணப்பட்ட அவர், திடீரென தலை சுற்றியதால் அங்கிருந்த நாற்காலியில் அப்படியே அமர்ந்தார். தமக்கு உடல் நலம் சரியில்லை என தமது வழக்கறிஞரிடம் ஆங் சான் சூகி தெரிவிக்க, மீண்டும் அவர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.