உலகம்

10 வயதில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய சிறுமி...!

2 நிறுவனங்களை நடத்தி வரும் சிறுமிக்கு குவியும் பாராட்டு..!

Malaimurasu Seithigal TV

30 வயதாகியும் சரியான நிலையான வருமானம் இன்றி தவித்து வரும் இளைஞர்களுக்கு மத்தியில் 10 வயதில் 2 நிறுவனங்களை நடத்தி கோடிக்கணக்கில் சம்பாத்து வருகிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 10 வயது சிறுமி. பொதுவாக நாம் எல்லாம் ஒரு 10-12 வயதில் 5-ம் வகுப்பு அல்லது 6-ம் வகுப்பு படித்த போது, இந்த மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை உள்ளது என எண்ணுவது, எப்படி பள்ளிக்கூடம் செல்லாமல் விளையாட செல்வது என திட்டம் தீட்டுவது போன்ற வேலைகளை தான் செய்துக் கொண்டிருந்தோம். ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 10-வது சிறுமி தனது 10-வயதில் இரண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 10 வயது சிறுமி பிக்ஸி கர்டிஸ், தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார். பிக்ஸி கர்டிஸ் தனது தாயான ராக்ஸி ஜசென்கோவுடன் இணைந்து பள்ளி நேரம் தவிர்த்து பிற நேரத்தில் பொம்மை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். 

பிக்சிஸ் ஃபிட்ஜெட் என்ற இந்த நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட முதல் பொம்மைகள் அனைத்தும் 48 மணி நேரத்தில் முழுவதுமாக விற்று தீர்ந்துவிட்டன. அதன் பின்னர் இவர்களது நிறுவனத்தில் இருந்து வெளிவரும் பொம்மைகளின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரிக்கத் துவங்கிவிட்டது. 9-வது வயதில் பொம்மை தயாரிப்பு 10-வது வயதில் Pixie's Bows என்ற குழந்தைகளுக்கான ஆடைகளை விற்கும் மற்றொரு நிறுவனத்தையும் தொடங்கினார் பிக்ஸி கர்டிஸ். இந்த நிறுவனத்திற்கும் அந்நாட்டுக் குழந்தைகளிடம் பெரும் வரவேற்பு கிடைக்கிறது. இது மட்டுமின்றி பிற நிறுவனங்களின் விளையாட்டுப் பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரத்தையும் இவர்கள் செய்து வருகின்றனர். இதன் மூலம் வெறும் 10 வயதில் பல லட்சம் டாலர்களுக்கு அதிபதியாக மாறியுள்ளார் இந்த சிறுமி.