உலகம்

சாதனை படைத்த இளவரசர் ஹாரியின் சுயசரிதை......

Malaimurasu Seithigal TV

இளவரசர் ஹாரியின் சுயசரிதை புத்தகத்தை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர்.

இங்கிலாந்து மன்னர் சார்லஸ், மறைந்த டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி .  அவர் ஸ்பேர் என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார்.  தற்போது அந்த புத்தகம் வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே ஹார்ட் பேக், மின்புத்தகம் மற்றும் ஆடியோ வடிவில் சுமார் 4 லட்சம் பிரதிகள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.  புத்தகத்தில் அவருடைய தாயாரான மறைந்த இளவரசி டயானாவை குறித்து அறியும் ஆவல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

புத்தகம் வெளியிடப்பட்டு முதல் நாளிலேயே மிக வேகமாக விற்பனையாகும் புனைகதை அல்லாத புத்தகம் என்ற சாதனையை இளவரசர் சார்லஸின் ஸ்பேர் புத்தகம் படைத்துள்ளது.  

-நப்பசலையார்