உலகம்

திவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம் அறிவிப்பு...

தொழிலதிபர் விஜய் மல்லையாவை திவாலானவராக லண்டன் நீதிமன்றம் அறிவித்தது. 

Malaimurasu Seithigal TV
இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன்  வாங்கி விட்டு அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் லண்டனுக்கு தப்பி சென்றார். அவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இங்கிலாந்து அரசு அவரை கைது செய்தனர். இதற்கிடையே, ஜாமீனில் உள்ள விஜய் மல்லையா, தன்னை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதே சமயத்தில் விஜய் மல்லையாவை திவாலானவராக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,  விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துக்களை முடக்க லண்டன் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.