உலகம்

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பீர் இலவசம்.... எங்கே தெரியுமா..?

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு இலவசமாக பீர் வழங்கப்படும் என்ற நூதன அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்.

Malaimurasu Seithigal TV

அமெரிக்காவின் சுதந்திர தினம் வருகிற ஜூலை 4ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், கொடிய தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் குறிக்கோளோடு அதிபர் செயல்பட்டு வருகிறார்.

மேலும் அன்றைய தினத்திற்கு முன் 70% பேருக்கு 2 டோஸ் அல்லது ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் உள்ள அவர் அப்போது தான் கோடை விடுமுறை காலம் மக்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும் எனவும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறார்.

இந்த குறிக்கோள் எட்டியதும், தடுப்பூசி செலுத்திவர்களுக்கு இலவசமாக பீர் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.