உலகம்

சிங்க தலை முகமூடி அணிந்து புத்தாண்டை வரவேற்ற சீனர்கள்...

Malaimurasu Seithigal TV

சீனா | உலகம் முழுவதும் ஜனவரி 1 புத்தாண்டு கொண்டாடும் நிலையில் சீனர்கள் லூனார் காலண்டரை அடிப்படையாகக் கொண்டு 16 நாட்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

12 ராசிக் குறிக்கும் விதமாக கடந்தாண்டு புலி ஆண்டாக கொண்டாடப்பட்ட நிலையில் இந்தாண்டு நீர்முயல் ஆண்டாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி நீர்முயல் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பாரம்பரிய சிங்க முகமூடி அணிந்து நடன கலைஞர்கள் அணிவகுத்த கண்கவர் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.