உலகம்

புதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள் ஒப்புதல்...

வட கொரியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு இடையேயான துண்டிக்கப்பட்ட தகவல் தொடர்பை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள  இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV
கடந்த ஆண்டு ஜுன் மாதம், வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன்னையும், அவரது ஆட்சியையும் விமர்சிக்கும் பிரசுரங்கள் அடங்கிய பலூன்களை, சில தென் கொரியர்கள், வட கொரியா நோக்கிப் பறக்க விட்டனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வட  மற்றும் தென் கொரியா எல்லையில் கேசாங் நகரில் இருந்த, இருநாட்டு பொது தகவல் தொடர்பு அலுவலகம், வடகொரியாவால் தகர்க்கப்பட்டது. இதையடுத்து இருநாடுகளுக்கு இடையேயான தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் வட கொரியா மற்றும் தென் கொரியா இடையேயான தகவல் தொடர்பை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தென் கொரிய அதிபர் அலுவலகம் ஒப்புக் கொண்டுள்ளது.