உலகம்

228 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சிறுவன்...

துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 13 வயது சிறுவன் 228 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார்.

Malaimurasu Seithigal TV

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் பல வகையான இழப்புகள் ஏற்பட்டது. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பல ஆயிரம் உயிர்கள் பலியாகின. ஒரு சிலர் காப்பற்றப்பட்டாலும், மீட்கப்பட்டாலும், உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில், அதில் முஸ்தஃபா என்ற ஒரு 17 வயது சிறுவனை, சுமார் 228 மணி நேரத்திற்கு பிறகு இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளனர். இஸ்தான்புல் மெட்ரோபாலிடன் மாநகரத்தின் மேயரான எக்ரென் இமாமோக்லு இது குறித்து பேசுகையில், “அண்டாக்யா பகுதியில் உள்ள இடிபாடுகளில் இருந்து சுமார் 228 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட முஸ்தஃபாவால், நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதன் காரணமாக 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கட்டிட இடிபாடுகளுக்குள் சுமார் 10 நாட்களாக சிக்கி தவித்த சிறுவனை மீட்புபடையினர் மீட்டுள்ளனர்.