உலகம்

துப்பாக்கி சூட்டில் மீண்டும் 3 பேர் பலி...

விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தொடரும் துப்பாக்கி சூட்டால் மக்களுக்குள் பதற்றம் நிலவியுள்ளது.

Malaimurasu Seithigal TV

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனா்.

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகே பெவர்லி கிரெஸ்ட் என்கிற இடத்தில் உள்ள சொகுசு விடுதியில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது.

அப்போது சொகுசு விடுதிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டார். இதில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.