உலகம்

இந்திய மாணவர்களை திருப்பி அனுப்பும் முடிவிற்கு, கனடா பிரதமர் தடை!

Malaimurasu Seithigal TV

கனடா: கனடாவில் இருந்து இந்திய மாணவர்களை திருப்பி அனுப்பும் முடிவிற்கு, அந்நாட்டு பிரதமர் தடை போட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், மேல் படிப்பிற்காக வெளிநாடுகள் செல்வது வழக்கம். அதில் வட அமெரிக்க நாடான கனடாவும் ஒன்று. 

அதுபோலவே, தற்போது அங்குள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், சில மாணவர்கள், போலியான கல்லூரி அனுமதிச் சான்றுடன், விசா பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலிச்சான்றுடன் வந்த மாணவர்களை, இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதாக கனடா அரசு தெரிவித்தது. இதனால் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, சில ஏஜண்டுகளின் மோசடியால் இந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மனிதாபிமானத்துடன் இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி  கனடா அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் மோசடி செய்தவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏமாந்த அப்பாவி மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது, எனவே மாணவர்களை திருப்பி அனுப்பும் முடிவிற்கு தடை விதித்துள்ளார், அந்நாட்டு பிரதமர் ட்ருடா சமீபத்தில் தெரிவித்துள்ளார்.