உலகம்

சூடானில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி... மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்... 

சூடான் பிரதமரை அந்நாட்டு ராணுவம் சிறைபிடித்துள்ளதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Malaimurasu Seithigal TV

1956-ம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற சூடான், பல ராணுவ புரட்சிகளை சந்தித்துள்ளது. 1989-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை சூடான் அதிபராக இருந்த ஒமர் அல்-பஷீரின் பதவியும், ராணுவ கிளர்ச்சியின் மூலமே பறிக்கப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி அரசு ஆட்சியமைத்தது. அப்போது அப்துல்லா ஹம்டோ பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சூடானில் கூட்டணி ஆட்சிக்கு எதிராக, ராணுவத்தினர் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு ஒத்துழைப்பு அளிக்காததால் பிரதமர் அப்துல்லா ஹம்டோவை சிறைபிடித்துள்ளனர். இந்த நடவடிக்கைகளால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். தலைநகர் ஹர்டோமுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.