உலகம்

போர்குற்றம் செய்ததாக நேபாள பிரதமர் மீது வழக்கு!

Malaimurasu Seithigal TV

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் மற்றும் முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டாராய் ஆகியோர் போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

நேபாள பிரதமராக பதவி வகிப்பவர் பிரசண்டா எனும் புஷ்ப கமல் தஹால். இவர் முன்பு மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய காலத்தில் போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி முன்னாள் மாவோயிஸ்ட் குழந்தை போராளிகள் குழு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. 

14 பக்கங்கள் கொண்ட அந்த மனுவில், நேபாளத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு போர் நிறுத்தத்திற்கு முன், மாவோயிஸ்ட் தலைவர்களாக இருந்த தற்போதைய பிரதமர் புஷ்ப கமல் தஹால் மற்றும் முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டாராய் ஆகியோர் ஆயுத மோதலில் சிறார்களை சேர்த்து போர்க்குற்றம் செய்ததாகக் கூறியுள்ளனர். மேலும் இரு தலைவர்களும் தங்களை ராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருக்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த வழக்கின் முதல் விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.