உலகம்

உலகெங்கும் 9 மாபெரும் முருகன் கோயில்... தீவிர பணியில் சற்குரு ஸ்ரீ சரவண பாபா!

Tamil Selvi Selvakumar

இலங்கை உள்பட உலகின் பல நாடுகளில் 9 மாபெரும் முருகன் கோயில்களை நிறுவும் பணியில் சற்குரு ஸ்ரீ சரவண பாபா ஈடுபட்டுள்ளார். 

இலங்கையில் தமிழர் பூர்வீக பகுதிகளில், தொடர்ந்து சிங்களர் குடியேற்றமும், புத்த மடலாயங்களை அமைப்பது குறித்தும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இலங்கையில் உள்ள பூர்வீக தமிழ் நிலங்களில், 3 பெரிய முருகன் கோவில்களை நிறுவ, லண்டனைச் சேர்ந்த சற்குரு ஸ்ரீ சரவண பாபா சுவாமி முடிவெடுத்துள்ளார். தமிழ் கடவுளான முருகனின் நாமத்தை உலகமெல்லாம் பரப்ப, திடசங்கல்பம் பூண்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

அதுமட்டுமல்லாது, கனடாவில் மிகப்பெரிய அளவில் நிலத்தை வாங்கி, அங்கும்  முருகனின் கோவில் ஒன்றை கட்ட ஆரம்ப வேலைகள் நடந்து வருகின்றன. லண்டன் மாநகரில் மிகப் பெரிய ஆலயத்தை புணரமைத்துக் கட்டியுள்ளனர். இதேபோல்,  சுவிஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில், ஈழத் தமிழர்களோடு இணைந்து கோவில்களை கட்டும் பணியில், சற்குரு ஸ்ரீ சரவண பாபா சுவாமி ஈடுபட்டு வருகிறார். இலங்கையில் 3 முருகன் கோயில்களும் உலக அளவில் மொத்தமாக 9 கோயில்களும் அமைக்கப்பட இருக்கின்றன.

இதன் ஒரு முயற்சியாக கனடாவில் ஞான வேலாயுத சுவாமி திருக்கோவில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இந்த ஆண்டு தொடக்கத்தில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.