chernobyl blue dogs 
உலகம்

செர்னோபில்லை சுற்றியுள்ள நாய்களின் உடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..! அடுத்த பேரழிவுக்கான அபாய மணியா!?

தற்போது வரை நீல நிற நாய்களின் பின்னணியில் உள்ள மர்மம் விலகவில்லை. ஆராய்ச்சி முடிவுகள் வந்த பின்னரே ....

மாலை முரசு செய்தி குழு

உலகையே உலுக்கிய செர்னோபில் அணு உலை விபத்தை நம்மில் யாரும் மறந்திருக்க முடியாது. மனிதர்கள் நடமாட்டமில்லாத அப்பகுதியில் 700 -க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகின்றன. அவற்றை பாதுகாக்கும் அமைப்பான ‘Dogs Of Chernobyl’ என்ற அமைப்பு அங்கே அடர் நீல நிறத்தில் நாய்கள் சுற்றி திரிவதை கண்டறிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் உலவி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

செர்னோபில் பேரழிவு 

ஏப்ரல் 26, 1986 - வரலாற்றில் மிக மோசமான அணு விபத்து ஏற்பட்ட நாள். வடக்கு உக்ரைனில் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் செர்னோபில் (Chernobyl) நகருக்கு அருகில் கட்டப்பட்ட அணுமின் நிலையத்தில் ஒரு அணு உலை வெடித்து எரிந்தது. இந்த சம்பவம் மனித வரலாற்றிலேயே அழிக்க முடியாத ரணமாக மாறிப்போன ஒரு நிகழ்வானது.  இந்த பேரழிவு நிகழ்ந்து 3 தசாப்தங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதும் இந்த ஆலையைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு இன்னும், குறைந்தது 20,000 ஆண்டுகள் வரை மனித உயிர் வாழக்கூடியதாக இருக்காது என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். 

இந்த விபத்தில் பலர் இறந்தனர், அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் தங்கள் உடமைகளை அப்படியே விட்டுவிட்டு வேறு இடத்திற்கு புலம் பெயர்ந்தனர். இப்பொது அப்பகுதி மனிதர் பயன்பாட்டில் இல்லாமல் காடு போல ஆகியுள்ளது. 

அணு விபத்து ஏற்பட்டபோது, அங்கு வசித்த மக்கள் செல்லப் பிராணிகளாக வளர்த்த நாய்களை அப்பகுதி மக்கள் அப்படியே விட்டுச் சென்றனர்அவையும் அங்கிருந்த காடு போன்ற சூழலுக்குத் தங்களைத் தகவமைத்து வளர ஆரம்பித்துள்ளன.(survival of the fittest) அந்த நாய்களின் அடுத்தடுத்த தலைமுறைகள் தான் இப்போது நீல நிறத்தில் மாறியுள்ளன.

இந்த நாய்கள் செர்னோபில் மண்டலத்தில் உயிர் பிழைப்பது சாத்தியம் என்பதற்கான அடையாளமாக மாறியுள்ளன. இப்படி இங்குச் சுற்றித் திரியும் நாய்களைத் தான் டாக்ஸ் ஆஃப் செர்னோபில் அமைப்பு கவனித்து வருகிறது. அவர்கள் சமீபத்தில் நாய்களுக்கு வழக்கமான கருத்தடை மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது அவர்கள் இந்த நீல நிற நாய்களை கண்டறிந்துள்ளனர். 

காரணம் என்ன!?

ஆராய்ச்சியாளர்கள் இந்த நாய்கள் ஏதேனும் ஒரு வேதிப்பொருட்களோடு தொடர்புகொண்டிருக்கலாம் என்கின்றனர், செர்னோபில் மண்ணின் தாவரங்களில் கலந்துள்ள வேதியியல் மாற்றங்கள் இந்த நாய்களை பாதித்திருக்க கூடும் என நம்பப்படுகிறது.

உண்மையை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் தற்போது அந்த நாய்களின் ரோமம், தோல் மற்றும் இரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை நடத்தி வருகின்றனர். உள்ளூர்வாசிகள் கூறுவதில், இந்த மாற்றம் ஒரே இரவில் நடந்தது போல இருந்தது. “எங்களுக்கு இதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. என்ன நடந்துள்ளது என்பதை அறிய நாய்களை பிடிக்க முயற்சித்து வருகிறோம். பெரும்பாலும், அவை ஏதோ ஒரு வகை வேதிப்பொருளுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்,” என்று அந்த அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கோபால்ட், காப்பர் சல்பேட் அல்லது பிற தொழிற்சாலை கழிவுகள் போன்ற பொருட்களுடன் நாய்கள் தொடர்பு கொண்டிருக்கலாம். இவ்வகை சேர்மங்கள் விலங்குகள் மாசடைந்த சூழலில் தொடர்பு கொண்டால், அவற்றின் ரோமத்தில் தீவிர நிறங்களை உருவாக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் அந்த நாய்கள் சுறுசுறுப்புடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

ஆனால் தற்போது வரை நீல நிற நாய்களின் பின்னணியில் உள்ள மர்மம் விலகவில்லை. ஆராய்ச்சி முடிவுகள் வந்த பின்னரே இதுகுறித்து தெரியவரும். ஆனால் சிலர் இந்த நீல நிற நாய்கள் மற்றொரு பேரழிவின் துவக்கம் என அஞ்சுகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.