உலகம்

கிழக்கு லடாக் பகுதியில் ராணுவ முகாம்களை விரிவுப்படுத்தும் சீனா...

கிழக்கு லடாக் பகுதியில் கட்டுப்பாட்டு கோடு அருகே புதிதாக ராணுவ முகாம்களை அமைக்கும் பணிகளில் சீனா இறங்கியுள்ளது.

Malaimurasu Seithigal TV

கிழக்கு லடாக் பகுதியில் கிட்டதட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக சீனா தனது ராணுவ துருப்புகளை நிலைநிறுத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. பதற்றத்தை தணிக்கவும் அமைதியை மீட்டெடுக்கவும் இரு நாடுகளும் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. சமீபத்தில் சின்ஜியாங் மலைசிகரத்தில் கிட்டதட்ட 16 ஆயிரம் அடி உயரத்தில்  சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டது.

இந்த நிலையில் தற்போது கிழக்கு லடாக் பகுதியில் கட்டுப்பாட்டு கோடு அருகே சீனா 8  இடங்களில் புதிதாக ராணுவ முகாம்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கரகோரம் கணவாய்க்கு அருகில் உள்ள வஹாப் ஜில்கா என்னும் பகுதியில் 8 இடங்களில் புதிய ராணுவ முகாம்களை அமைக்கும் சீனா தனது விமான தளங்களை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இது இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.