உலகம்

சீன முட்டை கோஸ் மோசடி - அதிர்ச்சியில் தென் கொரிய மக்கள்

99.9% சீனாவிலிருந்து வந்ததாக சுங்கத் தரவுகள் காட்டுகின்றன

மாலை முரசு செய்தி குழு

இறந்த உடல்களை நீண்ட காலம் கெடாமல் வைத்திருப்பதற்காக, சவக்கிடங்குகளில் பயன்படுத்தப்படும் நச்சு ரசாயனத்தில் முட்டைக்கோஸ்களை நனைத்து விற்பனை செய்த சீனாவின் உணவு மோசடி உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தென் கொரியாவின் தேசிய மற்றும் அவர்களின் கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத அடையாளமாக இருப்பது கிம்ச்சி எனப்படும் உணவாகும். நாபா முட்டைக்கோஸ் கொண்டு தயாரிக்கப்படும் இந்த உணவுடன், கொரிய கார மிளகாய்த்தூள் பூண்டு, இஞ்சி, வெங்காயம், மீன் சாஸ்அல்லது இறால் விழுது சேர்க்கப்பட்டு சமைக்கப்படுகிறது. கொரியாவில் ஆண்டுதோறும். அம்மக்கள் குளிர்காலம் முழுமைக்கும் தேவையான கிம்ச்சியை மொத்தமாகத் தயாரித்து வைத்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்

கொரியா தனது முட்டைக்கோஸின் பெரும்பகுதியைத் தானே உற்பத்தி செய்தாலும், சீனாவில் விளைவிக்கப்பட்டுள்ள முட்டைகோசுகளையும், கிம்ச்சிகளையும் மலிவான விலையில் வாங்கி அந்நாட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த 12 மாதங்களில் தென் கொரியா இறக்குமதி செய்த 341,31 டன் கிம்ச்சியில், 99.9% சீனாவிலிருந்து வந்ததாக சுங்கத் தரவுகள் காட்டுகின்றன. மேலும், பாரம்பரியமாக கிம்ச்சி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நாபா முட்டைக்கோஸ் வகையின் இறக்குமதியிலும் ஏறக்குறைய அனைத்தும் சீனாவிலிருந்தே வந்துள்ளன.

இந்நிலையில் சீனாவின் வடக்கு ஹெபே மாகாணத்தில் உள்ள காங்பாவோ மாவட்டத்தில், தொழிலாளர்கள் முட்டைக்கோஸ்களை லாரிகளில் ஏற்றுவதற்கு முன் ஒரு மர்ம திரவத்தில் நனைக்கும் வீடியோ இணையத்தில் கசிந்தது. இது குறித்த விசாரணையில் நீண்ட தூரப் போக்குவரத்தின் போது காய்கறிகள் அழுகாமல் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக, சவக்கிடங்குகளில் பயன்படுத்தப்படும் ‘ஃபார்மால்டிஹைட்’ ரசாயணத்தில் முட்டை கோஸ் போன்ற காய்கறிகளில் முழ்கடிக்கப்பட்டது தெரியவந்தது

இதனால் அதிர்ச்சி அடைந்த தென்கொரியா உணவு மற்றும் மருந்துப் பாதுகாப்பு அமைச்சகம், எல்லையில் சீன முட்டைக்கோஸ் மீதான சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட காய்கறிகள் ஏற்கனவே நாட்டிற்குள் வந்துவிட்டனவா என்பதைச் சரிபார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மலிவு விலைக்காக சீன இறக்குமதியை பெருமளவில் சார்ந்திருக்கும் தென் கொரிய உணவகங்களும், காய்கறி வணிகங்களும் தற்போது மிகுந்த கலக்கத்தில் உள்ளன

இப்போ தட்டுல முட்டைக்கோஸைப் பார்த்தாலே தென் கொரிய மக்கள் கைகூப்பி ஒதுங்கிப் போற நிலைமைக்கு வந்துள்ளதால் சீனா தனது ஏற்றுமதியில் ஒரு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.