உலகம்

ஜி 20 அமைப்பின் ஆலோசனை கூட்டம்... காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரை...

பயங்கரவாதத்தின் மையமாக ஆப்கானிஸ்தான் மாறிவிடக் கூடாது என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

தலிபான் பயங்கரவாதிகள் கையில், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் மீண்டும் சிக்கியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து, ஜி 20 அமைப்பின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, ஆப்கனில் அமைதி நிலவ வேண்டும்; வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பது தான், 130 கோடிக்கும் அதிகமான இந்திய மக்களின் விருப்பம் என குறிப்பிட்டார். ஆப்கன் மக்கள் பட்டினியாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கபட்டுள்ளது.

இந்தியர்களுக்கு பெரும் மனவலியை தந்ததுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, ஆப்கன் மக்களுக்கு உலக நாடுகள் மனிதாபிமான உதவிகளை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என்றும்,  அதேநேரத்தில் பயங்கரவாதத்தின் மையமாக ஆப்கானிஸ்தான் மீண்டும் மாறிவிடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நிர்வாகம் அமைய வேண்டும் என்பதுதான், இந்தியாவின் விருப்பம் எனவும் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆப்கனில் அமைதியை ஏற்படுத்துவதில் ஐ.நா., சபைக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதையும் சுட்டிக் காடினார்.