உலகம்

உலகை மிரட்டி வரும் கொரோனா.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 59. 67 லட்சமாக அதிகரிப்பு

உலக முழுவதும் கொரோனாவால் உயிரிழந்ததோர் எண்ணிக்கை 59. 67 லட்சமாக அதிகரித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

சீனாவில் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலகம் நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43.57 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 59. 67 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 36,61 கோடி பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 36 லட்சத்து 67 ஆயிரத்து 162 ஆக உள்ளது.

கொரோனா தொற்று அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாமிடத்திலும், பிரேசில் மூன்றாமிடத்திலும், பிரான்ஸ் நான்காமிடத்திலும், இங்கிலாந்து ஐந்தாம் இடத்திலும் உள்ளது.