உலகம்

"கொரோனா வைரஸ்" புதுசு பா.. எதோ XE- னு சொல்றாங்க.. இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாக WHO அதிர்ச்சி தகவல்!!

ஒமிக்ரானை விட அதிகம் பரவும் தன்மை கொண்ட கலப்பின திரிபு, இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

Suaif Arsath

உலகளவில் கடந்த 2020ம் ஆண்டு கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் பரவி மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியது.

இதற்கென தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அடுத்தடுத்து வந்த உருமாறிய வைரஸ் அலைகளால் கோடிக்கணக்கானோர் உயிரிழக்கவும் நேர்ந்தது. மேலும் தொடர் ஊரடங்கால் சர்வேத நாடுகளுக்கு பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது.

இதனிடையே அண்மையில் பரவிய ஒமிக்ரானின் வீரியம், பெரும்பாலான நாடுகளில் தணிந்த நிலையில், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் தொற்றிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றன.  தற்சமயத்திற்கு தடுப்பூசியை மட்டுமே நம்பியுள்ள உலக நாடுகள், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

இந்தநிலையில் இங்கிலாந்தில் XE என்ற கலப்பு திரிபு பரவுவதை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். அதாவது இரண்டுக்கு மேற்பட்ட திரிபுகளால் பாதிக்கப்பட்ட நோயாளியிடம் இருந்து இந்த கலப்பு திரிபு உருவானதாக உலக சுகாதார அமைப்பு தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.

இது ஒமிக்ரானின் பி.ஏ.2 மாறுபாட்டை விட 10 விழுக்காடு அதிகம் பரவும் தன்மைக்கொண்டது எனவும் ,  XE கலப்பு திரிபு தொடர்பான புதிய ஆராய்ச்சி உறுதிசெய்யப்பட்டால், அது இன்னும் தீவிரமாக பரவக்கூடிய கொரோனா வகையாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதாக கருதப்படும் சூழலில், உலக சுகாதார அமைப்பின் இந்த அறிவிப்பானது மக்களிடையே அச்சத்தையும், ஊரடங்கை பற்றிய கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.