உலகம்

ஆப்கானில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் பொதுமக்கள்...  எல்லை மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல்

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அதன் எல்லை மாவட்டங்களில் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Malaimurasu Seithigal TV

ஆப்கானின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஈரான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லையை நோக்கி ஏராளமானோர் விரைந்துள்ளதாகவும், அதனால் எல்லை மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான ஸ்பின் போல்டாக்கில்,தங்களது உடமைகளுடன் குடும்பங்களாக பொதுமக்கள் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான செயற்கைகோள் புகைப்படமும் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.