ஆப்கானிஸ்தானில் வயலில் பயிரிடப்பட்டிருந்த கசகசாவினை தலிபான்கள் அழித்தனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கல்வி உள்ளிட்டவற்றில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
அந்த வகையில், கசகசா பயிரிலிருந்து அபின் போன்ற போதை பொருட்கள் தயாரிக்கப்படுவதால் கசகசாவை பயிரிடவும் மேலும், தடையை மீறி பயிரிட்டால் வயல்கள் கொளுத்தப்படும் எனவும் தாலிபான் அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில், கந்தஹாரின் அர்கந்தாப் மாவட்டத்தில் கசகசா பயிரிடப்பட்டிருந்த வயலை தலிபான் பாதுகாப்புப் படையினர் அழித்துள்ளனர்.
-நப்பசலையார்