உலகம்

வளர்ச்சித்திட்டப் பணிகளை மீண்டும் தொடர வேண்டும்... தாலிபான்கள் வலியுறுத்தல்...

ஆப்கானிஸ்தானில் பாதியில் விடப்பட்ட வளர்ச்சித்திட்ட பணிகளை மீண்டும் தொடரும்படி இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வலியுறுத்தியதாக தாலிபான்கள் கூறியுள்ளனர். 

Malaimurasu Seithigal TV

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு நெருக்கடியான சூழல் நிலவுவதோடு, அந்நாட்டிற்கு வழங்க இருந்த நிதி உதவிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இங்கிலாந்து அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தூதரக பிரதிநிதிகளுடன் தோஹாவில்  ஆலோசனை நடத்தியதாக தாலிபான் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கூறியுள்ளார். 

இதுதொடர்பான புகைப்படத்துடன் டிவிட்டரில் பதிவிட்ட அவர், ஆப்கானிஸ்தானை தனிமைப்படுத்துவது கொள்கைக்கு விரோதமான செயல் என்றும், அங்கு வளர்ச்சி பணிகளை முடிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.