உலகம்

கொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட ஆய்வுக்கு மறுத்து சீனா குற்றச்சாட்டு...

கொரோன வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவின் போர்ட் டெட்ரிக்  பகுதி ஆய்வகத்தை, ஆய்வு செய்யும்படி உலக சுகாதார அமைப்புக்கு சீனா அறிவுறுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV
கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் சந்தையிலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியான நிலையில், அதன் உண்மை தன்மையை ஆராய உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட ஆய்வினை நடத்தியது. அதன் முடிவில், வவ்வால்கள் மூலம் மனிதர்களுக்கு தொற்று பாதித்து உலகெங்கும் பரவியிருக்கலாம் என கூறப்பட்டது. அதற்கான உறுதிப்பட தகவல் இல்லாதிருந்தும், சீனா தான் இந்த வைரஸை பரப்பியதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டியது. 
இதையடுத்து  2ம் கட்ட ஆய்வினை நடத்த உலக சுகாதார அமைப்பு முடிவு செய்த நிலையில் , சீனா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தங்களது ஆய்வு கூடங்களை சோதனை செய்வதற்கு முன், உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் அமெரிக்காவின் போர்ட் டெட்ரிக் பகுதியில் உள்ள உயிரியல் சார்ந்த ஆய்வகத்தை ஆய்வு செய்ய  சீன வெளியுறதவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லிஜியன் சாயோ வலியுறுத்தியுள்ளார். இதற்கு அமெரிக்கா வெளிப்படைத் தன்மையுடன் ஒத்துழைக்குமாயின் உண்மை நிலவரம் தெரியவரும் என அவர் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.