உலகம்

உசேன் போல்ட்டையே மிஞ்சும் அளவிற்க்கு ஓடும் டைனோசர்கள்...ஆய்வில் வெளிவந்த சுவாரசிய தகவல்...!

ஸ்பெயின் ஆராய்ச்சியளர்கள் டைனோசர்களை பற்றிய கட்டுகதைகளை போக்குவதற்காக தொடர்ந்த ஆராய்ச்சியில் அவை 45 கிமீ வேகம் செல்லும் என கண்டுபிடித்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

டைனோசர்கள் குறித்து இக்காலத்திலும் கதைகள் பல பேசப்பட்டு வருகின்றன. ஆனால், அவையெல்லாம் இல்லை என நிரூபிக்க ஒருபுறம் ஆய்வுகளும் நடந்து கொண்டு தான் இருந்தது. 

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் டைனோசர்கள்  ஊர்வன இனத்தை சேர்ந்தவையாக கருதப்படுகிறது. பல வகையான டைனோசர்கள் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.பூமியின் மீது மோதப்பட்ட மிகப் பெரிய விண்கல்லால் இந்த டைனோசர் இனங்கள் அழிந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் இந்த பெரு விபத்தில் இருந்து தப்பித்த டைனோசர்கள் தான் தற்போது பறவைகளாகவும், ஊர்வன விலங்குகளாகவும் இருந்து வருவதாகவும் ஆய்வுகள் சொல்கின்றனர்.தினமும்  நடத்தப்பட்டு வரும் புதுப்புது ஆய்வுகள் மூலம் வெளிவருகின்றன.இந்த ஆய்வின் போது உசேன் போல்ட்டை விட வேகத்தில் அதிகாமாக ஓடக்கூடிய திறன் கொண்ட டைனோசர்கள் வாழ்ந்துள்ளதாக தெரிவித்தனர். 

உலகின் அதிவேகமாக ஓடக்கூடியவர் உசேன் போல்ட்.  மணிக்கு 44.72 கிலோமீட்டர் வேகத்தில் அவர் ஓடியிருக்கிறார். ஆனால் அவர் வேகத்தை ஓவர்டேக் செய்யும் விதமாக 28 மைல், அதாவது 45.06 கிமீ வேகத்தில் ஓடக்கூடிய திறன் கொண்ட டைனோசர்கள் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அவற்றின் காலடி தடத்தை வைத்து இதனை அடையாளம் கண்டதாக கூறிய ஆரய்ச்சியாளர்கள் இவ்வகை இனத்தை சேர்ந்த டைனோசர் வகைகள் விலங்குகளை வேட்டையாட கூடியதாக இருந்திருக்கும் என தெரிவித்தனர். இவை இரையை வேட்டையாடும் நோக்கத்தில் வேகமாக நகர்ந்திருக்கலாம் என ஆய்வின் சாரம்சமாகவும், பிரபலமான டைனோசர்களான டி-ரெக்ஸ் மற்றும் வெலாசிராப்டர் என்ற இரண்டு கால்களில் நடக்கக்கூடிய டைனோசராகவும் அவை இருக்கக்கூடும் என கூறியுள்ளனர்.