உலகம்

ஒமிக்ரான் பாதிப்பால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் 5 வயதுக்கு கீழான குழந்தைகளின் எண்ணிக்கை - கவலையில் மருத்துவர்கள்

ஜார்ஜியாவில், ஒமிக்ரான் பாதித்த குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Tamil Selvi Selvakumar

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமிக்ரான் உலக நாடுகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  இது பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தாவிட்டாலும், அதிவேக பரவல் காரணமாக குழந்தைகளும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, வளர்ந்த நாடுகள் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் அக்கறை காட்டி வருகின்றன. ஜார்ஜியா நாட்டிலும் 5 வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

ஆனால் அங்கு ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பெரும்பாலும் 5 வயதுக்கு கீழான குழந்தைகளே பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இளம் சிறார்களே தொற்றுக்கு ஆளாகி, கூட்டம் கூட்டமாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும், இதனால் தற்போது ஜார்ஜியாவில் ஒமிக்ரான் பாதிப்பு டெல்டா பாதிப்பு எண்ணிக்கையை நெருங்கியிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அரசும் தேவையான  நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.