உலகம்

பெண்ணின் கல்லீரலில் வளர்ந்த கருவை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி!

கனடாவில் 33 வயதுடைய பெண்ணிற்க்கு கருவானது கல்லீரலில் வளர்ந்துள்ளது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Malaimurasu Seithigal TV

பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கிய தருணமாக உள்ளது.கரு உருவாகி குழந்தை பிறப்பதற்க்குள் அப்பெண் பல அபாயகட்டங்களை தாண்டி வர வேண்டி இருக்கிறது.

இதற்கிடையில் கனடாவை சேர்ந்த 33 வயதான பெண் ஒருவருக்கு ஏற்பட்ட அதிகப்படியான மாதவிடாய் காரணமாக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரின் உடல்நிலையை சோதனை செய்து பார்த்த போது அவருக்கு கல்லீரலில் கருவானது வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.

இதனை இடம் மாறிய கர்ப்பம் என சொல்லப்படுவாதாக தெரிகிறது.அதாவது கருவுற்ற முட்டையானது கருப்பையில் இல்லாமல் மற்றொரு இடத்திற்கு மாறுதல் அடைவதனை இதன் காரணமாக தெரிவிக்கின்றனர்.

மேலும் இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் கல்லீரலில் குழந்தை வளர்வது மிகவும் அரிதான நிகழ்வாக கருதுகின்றனர்.1964 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை உலகிலேயே 14 பேருக்கு கல்லீரலில் கரு வளர்ந்துள்ளது.சில நேரங்களில் வயிற்று பகுதியில் கரு வளர்ந்ததை பார்த்துள்ளோம். ஆனால் தற்போது கல்லீரலில் கரு வளர்ந்ததை முதல் முறையாக பார்ப்பதாக தெரிவித்தனர். இவ்வகையான கரு அப்பெண்ணின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என அக்குழந்தையை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.