உலகம்

மனிதர்களை மிஞ்சிய விஸ்வாசம் .... சிலிர்க்க வைக்கும் செல்லப்பிராணியின் செயல்

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு பின்னாடியே நாய் ஓடிய வீடியோ வைரலாகி வருகின்றது.

Malaimurasu Seithigal TV

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வசிக்கும் பெண் ஒருவர் ரெட்ரீவர் வகையினை சேர்ந்த நாயினை வளர்த்து வருகிறார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் போகியுள்ளது.

இதனால் ஆம்புலனஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த வீட்டில் வளர்த்த பாசக்கார நாய் 
அவரது மீது கொண்ட அன்பினால் பல கிலோமீட்டர் ஆம்புலன்ஸ் மருத்துவமனை வரும் வரை ஓடி வந்துள்ளது. 

தற்போது அவர் மீண்டும் எப்போது வீட்டுக்குவருவார் என நாய் காத்திருக்கும் காட்சி காண்போரை திகைக்க  வைத்துள்ளது.