உலகம்

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி அதிபா் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டிரம்ப், பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, அதிபராக தேர்வானார்.

Jeeva Bharathi

அமெரிக்காவின் புதிய அதிபா் பதவியேற்கு விழா நேற்று இரவு நடைபெற்றது. இதற்காக, கார்கள் புடைசூழ வெள்ளை மாளிகைக்கு வந்தடைந்த டிரம்பை, ஜோ பைடன் கைகுலுக்கி வரவேற்றார்.

கடுமையான குளிர் காரணமாக வெள்ளை மாளிகையில் உள்ள கேபிட்டால் கட்டிடத்திற்கு உள்ளே ரோடுண்டா என்ற பகுதியில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. டிரம்ப் பதவியேற்பு விழாவானது, இசை நிகழ்ச்சியுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தொடா்ந்து இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் பதவியேற்று கொண்டாா். அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், டிரம்புக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். அப்போது, டிரம்புக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் பீரங்கி குண்டுகள் முழங்கின.

இதே விழாவில் துணை அதிபா் ஜே.டி.வான்ஸும் பதவியேற்றுக்கொண்டாா். பதவியேற்பு விழாவில் அமெரிக்க முன்னாள் அதிபா்கள், உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டனா். இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவு துறை அமைச்சா் ஜெய்சங்கர் பங்கேற்றாா். மேலும் டிரம்பின் ஆதரவாளா்கள் லட்சக்கணக்கானோா் கலந்து கொண்டனா். அமொிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டிரம்புக்கு பிரதமா் மோடி, ரஷிய அதிபர் புதின் உள்ளிட்டோா் வாழ்த்து தொிவித்துள்ளனா்.