உலகம்

அடேங்கப்பா... உலகின் மிகப்பெரிய நீல ரத்தினக்கல் கண்டுபிடிப்பு!  

உலகில் மிகப்பெரிய நீல ரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

உலகில் மிகப்பெரிய நீல ரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் உள்ள ரத்தினாபுரம் என்ற இடத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விலை உயர்ந்த, மதிப்பு மிக்க ரத்தினக்கல் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.இதற்கு ஆசியாவின் ராணி என பெயரிடப்பட்டுளது. ரத்தினாபுரம் இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இலங்கை தேசிய இரத்தினக்கல் மற்றும் நகைகள் அமைப்பின் சார்பில் அந்த கல் சர்வதேச சந்தையில் விற்கப்பட்ட உள்ளது .இதற்காக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.இந்த ரத்தின கல்லுக்காக துபாய் நிறுவனம் 100 மில்லியன் டாலர் (கிட்டத்தட்ட 20 பில்லியன் ரூபாய்) வழங்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேலும் இலங்கையில் நிலவி வரும் பொருளாதார சூழ்நிலை காரணமாக இந்த கல்லை அதிகபட்சமான விலைக்கு விற்க்க  உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இந்த கல் சுமார் 110 கிலோ எடை கொண்டது என்றும் இதன் மதிப்பு சுமார் 2500 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.