உலகம்

நேரடி செய்தி ஒளிப்பரப்பில் ஆவேசத்துடன் கூச்சலிட்ட செய்திவாசிப்பாளர்!!

Tamil Selvi Selvakumar

செய்திவாசிப்பாளர் ஒருவர் நேரடி செய்தி ஒளிப்பரப்பின் போது, ஆவேசத்துடன் கூச்சலிட்டு அனைவரையும் முகக்கவசம் அணிய வலியுறுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மெக்ஸிக்கோவில் உள்ள பிரபல செய்தி ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருபவர் லியானார்டோ ஷெப்வெபல். 

அண்மையில்,  நேரடி செய்தி ஒளிப்பரப்பின்போது, கேமரா முன் தோன்றிய அவர்,  தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை விமர்சித்ததோடு, முககவசத்தை அணியும்படி கூச்சலிட்டபடி கூறியுள்ளார். இந்த காட்சிகள் தற்போது இணையதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இருப்பினும்  இதற்கு தான் மன்னிப்பு கோர மாட்டேன் என கூறியுள்ள லியானார்டோ, முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தானும் இதுபோன்றதொரு வீடியோ வெளியிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.