உலகம்

12-17 வயது குழந்தைகளுக்கு போடலாம்... மாடர்னா தடுப்பூசிக்கு ஐரோப்பிய குழு ஒப்புதல்...

அமெரிக்காவில் மாடர்னா தடுப்பூசியை 12 முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்கு செலுத்த ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

Malaimurasu Seithigal TV
மாடர்னா தடுப்பூசி இரு டோஸ்களை செலுத்திக் கொண்டவுடன் 12 வயது முதல் 17 வயதினருக்கு 100 சதவீதம் திறம்படவுள்ளது என அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவில் 3 அயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப் பட்டதில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாடர்னா தடுப்பூசியை 12 முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்கு பயன்படுத்த ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு முன்னதாக ஃபைசர் - பயோஎன்டெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி 18வயதுக்கு கீழ் உள்ள இளம் பருவத்தினருக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.