உலகம்

டம்பி துப்பாக்கி குண்டுகள் துளைத்து பிரபல புகைப்பட இயக்குநர் பலி…    

நியூ மெக்ஸிகோவில் படபிடிப்பு தளத்தில் டம்பி துப்பாக்கியின் குண்டுகள் துளைத்ததில் பிரபல புகைப்பட இயக்குநர் ஹலினா ஹட்சின்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

நியூ மெக்ஸிகோவில் படபிடிப்பு தளத்தில் டம்பி துப்பாக்கியின் குண்டுகள் துளைத்ததில் பிரபல புகைப்பட இயக்குநர் ஹலினா ஹட்சின்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த புகழ் பெற்ற நடிகர் அலெக் பால்ட்வின் மற்றும் ஜென்சன் அக்லஸ் ஆகியோர் இணைந்து நடிக்கும் "ரஸ்ட்" என்னும் ஆங்கில படத்தில் படப்பிடிப்பு நியூ மெக்ஸிகோவில் நடைபெற்று வந்துள்ளது. போனன்சா க்ரீக் பண்ணையில் பிரம்மாண்ட செட் அமைத்து நடத்தப்பட்ட இந்த படப்பிடிப்பில் துப்பாக்கி சூடு நடப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

அப்போது படப்பிடிப்புக்காக வைக்கப்பட்ட டம்பி துப்பாகியில் இருந்து பாய்ந்த குண்டுகள் புகைப்பட இயக்குநர் ஹலினா ஹட்சின்ஸ் மற்றும் இயக்குனர் ஜோயல் சவுசா ஆகியோரை துளைத்துள்ளது.

இதில் ஹலினா ஹட்சின்ஸ் சம்பவ இடத்திலேயே பலியாக இயக்குனர் ஜோயல் சவுசா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கியை இயக்கியது நடிகர் அலெக் பால்ட்வின் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.