உலகம்

இறந்த மகளின் கையைப் பிடித்து அருகிலேயே அமர்ந்திருந்த தந்தை... மனதை வருடும் வைரல் போட்டோ...

Malaimurasu Seithigal TV

குறைந்தது ஆயிரக்கணக்கான உயிர்களை விழுங்கிய துருக்கி சிரியா நிலநடுக்கத்தில் இருந்து பல மனதை வருடும் செய்திகள் வெளி வந்தப்படி இருக்க, ஒரு சில தகவல்கள் கண்களைக் கலங்கவே வைக்கிறது. அதில் ஒன்று தான், ஒரு தந்தை தனது இறந்த மகளின் சடலத்தின் கைகளைப் பிடித்தப்படியே அமர்ந்திருந்த சம்பவம்.

இது குறித்த போட்டோக்கள் இணையத்தில் தற்போது படு வைரலாகி பலரது மனதை துக்கப்படுத்தி வருகிறது. 

காரமன்மராஸ் என்ற பகுதியில், சுமார் 5,100 உயிர்கள் பலியான நிலையில், தனது 15 வயதே ஆன தனது மகள், இர்மாக் இறந்த நிலையில், அவளது கைகளை மட்டுமே பிடித்துக் கொண்டு அருகில் அமர்ந்து கொண்டிருந்தார்.

மெசூட் ஹன்சர் என அடையாளம் காணப்பட்ட அந்த தந்தையின் போட்டோக்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருவதால், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருத்தம் தெரிவித்தும், அவர்களது வாழ்வாதாரம் மீண்டும் பழமைக்கு விரைவில் திரும்ப வேண்டும் எனவும் உலக மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.