உலகம் முழுவதும் கொள்ளை சம்பவங்கள் மிக நூதனமாக நடைபெற்று வருவதை பார்த்து உள்ளோம். சில திருட்டுகளையும், கொள்ளைகளையும் மையப்படுத்தி பல புகழ்பெற்ற படங்கள் வந்துள்ளன. ஆனால் பாதுகாப்பு வசதிகள் மிதமிஞ்சி உள்ள இந்த சமயத்திலும் ஒரு புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில் மிகப்பெரிய கொள்ளை சம்பவம் ஒன்று அரங்கியுள்ளது.
மோனாலிசா ஓவியம் உள்ளிட்ட உலகின் முக்கியமான வரலாற்று கலைப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வரும் பாரிஸின் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் இந்த திருட்டு சம்பவம் நடந்திருக்கிறது. நெப்போலியன் காலத்து நகைகள் திருடப்பட்டதால், அருங்காட்சியகம் நேற்றிலிருந்து தற்கொலைக்காம மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கொள்ளை அருங்காட்சியகம் திறக்கப்பட்டு காலை 9:30 மணியிலிருந்து 9.37 -க்குள் நடந்தது. செயின் நதியை நோக்கியுள்ள கட்டுமானப் பகுதியின் வழியாக கொள்ளையர்கள் நுழைந்து ஹைட்ராலிக் ஏணி மூலம் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்துள்ளனர்.ஹைட்ராலிக் ஏணியைப் பயன்படுத்தி அப்பல்லோ கலைக்கூடத்தை அடைந்ததாகவும் பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அப்பல்லோ கலைக்கூடத்தில் பிரெஞ்சு அரச நகைகளின் ஒரு பகுதி காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த சமயத்தில் திருட்டு திட்டமிட்ட நடத்தப்பட்டிருக்கிறது. டிஸ்க் கட்டரை பயன்படுத்தி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைந்து, வெறும் 7 நிமிடங்களில் நகைகளை திருடி சென்றுள்ளனர் என்று பிரான்ஸின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். கொள்ளை போன நகைகளின் மதிப்பு பல கோடியை தாண்டும் எனக் கூறப்படுகிறது.
கொள்ளையர்கள் நெப்போலியன் மற்றும் பேரரசியின் நகைத் தொகுப்பிலிருந்து ஒன்பது நகைகளை திருடிச் சென்றுள்ளனர். திருடப்பட்ட ஒரு நகை பின்னர் அருங்காட்சியகத்திற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டது. அருங்காட்சியக நிர்வாகம் இச்சம்பவம் குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. சம்பவத்தையடுத்து அருங்காட்சியகம் மூடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே முன்பதிவு செய்த பார்வையாளர்களின் பணம் திருப்பி தரப்படும் எனவும் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.