உலகம்

தடுப்பூசி போடலனா வேலையில்லை... பிஜி அரசாங்கம் அதிரடி அறிவிப்பு...

தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பிஜி தீவில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவர் என்று அந்நாட்டு பிரதமர் உத்தரவு  பிறப்பித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV
பிஜியில் உருமாறிய டெல்டா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவை கையாளமுடியாமல் பிஜி தத்தளிக்கும் நிலையில், தடுப்பூசியின் மீதான பயம் காரணமாக பலரும் தடுப்பூசி செலுத்தாமல் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 15க்குள் தடுப்பூசியின் முதல் டோஸினை செலுத்திக்கொள்ளாத 9 லட்சத்து 30 ஆயிரம் ஊழியர்களுக்கு தற்காலிக விடுப்பு அழிக்கப்படும் என்றும், 2வது டோஸினை  நவம்பர் ஒன்றுக்குள் செலுத்தாதோர் பணியிலிருந்து நீக்கப்படுவர்  என பிரதமர் தெரிவித்துள்ளார்.