உலகம்

தொடக்கப்பள்ளி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து பள்ளி அருகே துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மாணவர் கைது!

அமெரிக்காவில்,  தொடக்கப்பள்ளி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, மற்றொரு பள்ளி அருகே துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Tamil Selvi Selvakumar

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளி ஒன்றுக்குள் கடந்த செவ்வாய் கிழமை நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 சிறுவர்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.

நடப்பாண்டு தொடர்ந்து 8வது முறையாக நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் அங்குள்ள பெர்க்னர் உயர்நிலை பள்ளி அருகே அதே பள்ளியை சேர்ந்த மாணவர் ஒருவர் துப்பாக்கியுடன் சுற்றித்திரிவதாக நேற்று கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது வாகனத்தில் இருந்து பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.