உலகம்

இளவரசர் ஹாரி - மேகன் தம்பதிக்கு பெண் குழந்தை.... இந்த பெயர் வைக்க இதான் காரணமா

இளவரசர் ஹாரி-மேகன் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

Malaimurasu Seithigal TV

இங்கிலாந்து இளவரசர் ஹாரியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும் காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். எனினும், இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரம் மீது அதிக பற்றில்லாமல் இருந்த ஹாரி-மேகன் தம்பதி, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தனர்.

தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு ஆர்ச்சி எனும் 2 வயது மகன் இருக்கிறான்.

இந்நிலையில், மேகனுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது.  ஹாரி-மேகன் தம்பதி தங்களுடைய மகளுக்கு ராணி எலிசபெத் மற்றும் ஹாரியின் தாய் டயானா ஆகியோரது பெயரை கொண்டு லில்லி டயானா என பெயரிட்டு உள்ளனர்.  ராணி எலிசபெத்தின் குடும்ப பெயர் லில்லிபெட் ஆகும்.