உலகம்

சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே!

மாலத்தீவில் தஞ்சம் அடைந்திருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Malaimurasu Seithigal TV

இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் போராட்டம் வெடித்தது. அதிபரும், பிரதமரும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் அதிபரை மாளிகையை முற்றுகை இட்ட நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்யவதாக அறிவித்துவிட்டு மாலத்தீவிற்கு தப்பிச் சென்றார் அதிபர் கோத்தபய ராஜபக்சே. 

கோத்தபய நள்ளிரவில் சிறப்பு ராணுவ ஜெட் விமானம் மூலம் கொழும்புவில் இருந்து தப்பி செல்லும் வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மாலத்தீவு கோத்தபயாவுக்கு அடைக்கலம் தர ஒப்புக்கொண்டது. ஆனால் அங்குள்ள மக்கள்  கோத்தபயாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.