உலகம்

அமெரிக்காவில் அதிகளவில் உயர்ந்த பணவீக்கம்...! எத்தனை சதவீதம் தெரியுமா?

அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மே மாதத்தில் பணவீக்கம் 8 புள்ளி 6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Tamil Selvi Selvakumar

அமெரிக்காவில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக பணவீக்கம் உச்சத்தை தொட்டதை அடுத்து மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் மளிகைப்பொருள் விலையில் 11 புள்ளி 9 சதவீதம் உயர்வதும், 2005ம் ஆண்டுக்குப்பிறகு பெட்ரோல் விலை 49 சதவீதம் அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.