உலகம்

பூங்கா பராமரிப்பாளருக்கு முத்தமழை பொழிந்த கழுதைப்புலி...

அமெரிக்காவில் கழுதைப்புலி ஒன்று விலங்கியல் பூங்கா பராமரிப்பாளருக்கு முத்த மழை பொழிந்த வீடியோ வெளியாகி பலரையும்உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV
கலிபோர்னியாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் பல்வேறு வகையான வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த பூங்காவின் உரிமையாளரான  ஜே ப்ரேவர் கழுதைப்புலியுடன் நீச்சல் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவரது கைக்குள் இருந்த கழுதைப்புலி அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரது முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தது. இதைக்கண்டு நெகிழ்ந்து போன அவர் அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் அதனை பார்த்த பலரும் டிஸ்கவரி சேனலில் ரத்த காட்டேரியாக பார்க்கப்படும் கழுதைப்புலிக்குள்ளும் அன்பு இருப்பதாக கருத்து கூறி வருகின்றனர்.