மறைந்த போப்பாண்டவரின் புதிதாக வெளியிடப்பட்ட அவரது நாட்குறிப்புகளின்படி, அவர் தனது பதவிக் காலத்தில் ஓர் ஆன்மீக நெருக்கடியைச் சந்தித்ததாகவும், அப்போது, அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்துப் போராடிக் கொண்டிருந்ததாகவும், அந்த சமயத்தில் சாத்தான் மற்றும் நரகம் குறித்த காட்சிகளைக் கண்டதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
அர்ஜென்டினாவினை சேர்ந்த மறைந்த போப், 1992 முதல் 2024 வரை, முதலில் அர்ஜென்டினாவில் ஆயராக இருந்தார் அதன் பின்னர் போப்பாகத் தேர்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் எழுதிவந்த நாட்குறிப்பு கடந்த செவ்வாய் கிழமை அன்று வெளியிடப்பட்டது. போப் பிரான்சிஸின் நெருங்கிய உதவியாளரான கர்தினால், விக்டர் மானுவல் பெர்னாண்டஸால் தொகுக்கப்பட்டு, உலகளவில் பல மொழிகளில் வெளியிடப்பட்ட 'திருத்தந்தை பிரான்சிஸின் தனிப்பட்ட நாட்குறிப்பு' என்ற புத்தகத்தில் போப் உணர்ந்த சாத்தானின் உருவங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது பேசுபொருளாக மாறியுள்ளது.
160 பக்கங்களைக் கொண்ட “போப் பிரான்சிஸின் தனிப்பட்ட நாட்குறிப்பு” போப்பின் ஆன்மீக வாழ்க்கை மற்றும் அவரது ஆயர் பணித்திட்டங்களில் கவனம் செலுத்தினாலும், முதல் லத்தீன் அமெரிக்க போப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவது தொடர்பான கஷ்டத்துடன் எவ்வாறு போராடினார் என்பதையும் அந்த புத்தகமானது விவரிப்பதாக கூறப்படுகிறது. போப் ஃபிரான்சிஸ், அர்ஜென்டினாவில் இருந்தபோது 'கருப்பு அட்டை' கொண்ட அந்த நாட்குறிப்பில் பேராயராக இருந்தபோது 86 பக்கங்களை எழுதியுள்ளார். அதன் பின்னர் போப்பான இருந்தபோது 55 பக்கங்களை அவர் எழுதியுள்ளார்.
தான் எழுதிய அந்த நாட்குறிப்பில் அவர் அவ்வப்போது சாத்தானை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும், ஃபிரான்சிஸ் சாத்தானுடனான மூன்று சந்திப்புகளை பற்றி அந்த நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் இரண்டு, அவர் பியூனஸ் அயர்ஸின் பேராயராக இருந்தபோதும், மற்றொன்று 2018-ல் அவர் போப்பாக இருந்தபோதும் நிகழ்ந்ததாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் கண்ட சாத்தானுக்கு நெருப்பு கண்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்தக் கண்களை "அச்சுறுத்தும்" மற்றும் "மயக்கும்" கண்கள் என்றும் அவர் அந்த நாட்குறிப்பில் விவரித்துள்ளார். தான் பார்த்த அந்த சாத்தானை எங்கு கண்டார்? என்பது குறித்தும் அப்போது அவர் என்ன மாதிரியான மனநிலையில் இருந்தார்? என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். “நான் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது காரிலிருந்தும், திருப்பலியின் போது பாடகர் குழு மேடையிலிருந்தும் நான் பார்த்த முதல் இரண்டு தருணங்களை (சாத்தானை கண்ட தருணம்) என்னால் மறக்க முடியவில்லை" என்று எழுதியிருந்தார்.
மூன்றாவதாக அவர் கண்டது, 2018-ல் சிலிக்குச் சென்று திரும்பிய பிறகு நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மதகுருமார்களின் பாலியல் நடவடிக்கையால் அந்தப் பயணம் பெரிதும் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மேலும், போப் ரோம்-மிற்கு திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு, அவர் ஒரு கூட்டத்தில் இருந்ததாகவும் அப்போது சாத்தானை கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த முறை சாத்தானின் குரலையும் கேட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கதாக அமைந்தது. அதாவது, அவர் ஒரு கூட்டத்தில் இருந்தபோது 'இப்போது நான் விரும்பிய அனைத்தையும் பெற்றுவிட்டேன்,' என்று கரகர குரலில் கேட்டதாகவும் போப் குறிப்பிட்டுள்ளார். மேலும், போப் பிரான்சிஸ் நரகத்தின் நுழைவு வாயிலை கண்டதாகவும் அவர் தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
போப் தனது 12 ஆண்டு திருத்தந்தை பதவிக் காலத்தில், LGBTQ கத்தோலிக்கர்களை நடத்தும் விதம் மற்றும் திருச்சபையில் பெண்களின் பங்கு உள்ளிட்ட பல சீர்திருத்தங்களைத் திருச்சபையில் முன்னெடுத்துள்ளார். ஆனால், அதற்கு இணையான எதிர்பினையும் அவர் எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.